வியாழன், 6 ஆகஸ்ட், 2009

ஞானி


வேண்டாத பொருள் தேடி
விரும்ம்பி நீ ஓடு!...
உன்னை நாடாத அனைத்திலும்
பற்று நீ கொள்!
பொருளில்லா பொருள் பொருள்பேசி
புதிராய் நீ விளங்கு
புரியாத பொருளெல்லாம் புரிந்ததை
பொய்யாய் நீ புழுகு!
உன்னை ஞானி என
பிரரழைக்க இது போதும்!.

புரிந்துகொள்கிறேன்

உன்னை
மறந்திட வேண்டுமென்று
நினைவுகளால்
உன்னை மறக்காமலும்!..

பிரியவேண்டுமென்று
தொலைவில் சென்றும்
உன்னை பிரியாமலும்!..

விரல்கள்
தடுக்க தடுக்க
உன்னை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கும்
எனக்கு புரிவ்தேஇல்லை
என்னை!.

செவ்வாய், 9 ஜூன், 2009

வெற்றி

வரமாட்டாய்

எனத் தெரிந்தும் உனக்கு

நானளித்த திருமண பத்திரிகை.,

உன்

ஏளனமும்.,

அலட்சியமும்.,

உடைந்து நிற்க.,

வேண்டாமென்று மரம் உதிர்த்த மலர்

கூந்தலோன்றேரிய சந்தொஷமேனக்கு.,

உனக்குள் உறைந்த

மௌனம் சொன்னது

என் வெற்றியை!.

வெள்ளி, 22 மே, 2009

காதலிக்கும்பொழுது

* நடக்கும் பொழுதினில்
கனவு காணும்

எல்லோரும் கோபத்தில் இருக்கையில்
சிரிக்கத் தூண்டும்.

ஒரு கவளமும் உண்ணாமல்
வயிறு நிறையும்.

தனந்தநிமையில்
பேசத் தூண்டும்.

கண்ணாடி குவளை பார்த்தும்
தலை வாரச் சொல்லும்.

பொறுப்பை உடைகளை
வெளுக்கச் செய்யும்.

காகிதப்பூவின் நறுமணத்தில்
மனம் லயிக்கும்.

சமத்துவ பூக்கள்
மனதில் மலரும்.

ஆர்ப்பாட்ட உலகம்
அமைதியாய் தெரியும்.

முட்களும் மலராய்
பார்க்கத் தூண்டும்.

காதலின் சாதனை
இது மட்டும் அல்ல.

காத்த நொடிகள்
நெருப்பாய் தகிக்கும்

பார்த்த நொடிகள்
வருடங்களாய் நீளும்
தண்ணீராலோ - கண்நீராலோ
தாகம் தீரும்.

சோம்பல் மறைந்து
சுறு சுறுப்பு எழும்.

காதலால் மானிடர்க்கு
நன்மையும் உண்டாம்
தீமையும் உண்டாம்.

நானும் காதலிக்கிறேன்
உன்னை மட்டும்
காலங்கள் முழுமைக்கும்
என் இறப்பின் வரை!

அடையாளம்

உன்னை

தோழி ஒருத்தி அறியவென்று

அடையாளம் காட்டி சிலிர்த்தது

என் இதயம்!


நான்

பாராத கணத்தில்

பார்த்த உன் பார்வையை

பார்த்து சொன்னாள்

என்னிடம் என் தோழி!


நீ

போன பின்னும் - நீ

போகவில்லை என சொன்னாள்

என் கண்ணுள் பார்த்து

உயிரை ஆய்ந்த தோழி!





















காதல்

காதலுக்கு முகவரி கொடுத்தவர்கள்

என்று சிலரை சொன்னார்கள்.,

ரோமியோ - ஜூலியட் .,

அம்பிகாபதி - அமராவதி.,

லைலா - மஜ்னு

அனார்கலி - சலீம்.,

ஷாஜகான் - மும்தாஜ்

என உதாரண ஜோடிகள் நீண்டுகிடக்க.


மெல்ல காதலை கேட்டேன்.,

"இவர்களின் முகவரியிலா
வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்?!"


நகைத்தது காதல்.,

"உலகத் தோற்றத்தின்

உயிர் நான்.,

ஒவ்வொரு உயிரின்

சுவாசம் நான்.,

மனிதனில் உருவாகவில்லை நான்

அணுக்களில் தொடங்கி கருவானேன்!

இவர்கள் எனக்கு முகவரியல்ல

என் முகவரியில் அவர்கள் வாழ்கிறார்கள்."


"எப்படி?!" என்றேன்.


"காதல் இல்லையேல்

இந்த காவியங்கள் இல்லையே!"



TAMIL KAVITHAIGAL: MOZHI

TAMIL KAVITHAIGAL: MOZHI
tamilnet.com

புதன், 20 மே, 2009

MOZHI

* பேசிக்கொண்டிருந்தோம
மௌனங்களால்
உயிரால் பார்த்துக்கொண்டு.
* காதல் பாடல்கள்
ஒலித்துக்கொண்டிருந்தன

நம் மனங்களுக்குள்
* எண்ணிலடங்கா காதல் ஆண்டுகளை
வாழ்ந்துகொண்டிருந்தோம்
கடக்கும் நொடிகளால்.
* உதடு துடித்து
சில வார்த்த்தை தெறித்தன,
நீ தலையசைத்து
போகிறேன் என்றபோது
"எப்போது மீண்டும்?!"- என்று.
கண்களால் "நாளை" என்றாய்,
இதயத்தால் "போய் வா" என்றேன்.
* இரவின் மௌனத்தில்
இன்றிரவு மின்மினி
நம் காதலை இசைக்கும்
மௌன ஊடகம் வழியே
நமக்குள்.



முன்னுரை

நான் எழுதும் ஒவ்வொரு எழுதும்
யார் யார் யோசித்ததோ ?
பலரின் சிந்தனைக்குள் பதிந்து
பிரதி எடுத்துக்கொண்டிருக்கின்றேன் .
இரவின் மடியிலும்
பகலின் கரங்களிலும்

எத்தனையோ மஹா கவிகள்
யோசிப்பவைகளை எழுதுகிறேன்.
இதுவும் இரவலோ
தெரியவில்லை யோசிக்கிறேன்.
பனித்துளி பஞ்சனைகளில்
நினைவுகளை தவழவிட்டு
பணியில் குளிப்பாட்டுகின்றேன்.
ஆனாலும்.,
என் மனம் அடிக்கடி சொல்கின்றது,
நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும்
யார் யார் யோசித்ததோ!


















VANAKKAM

என் இனிய தோழர்களே/ தோழிகளே உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் .
இங்கே நீங்கள் என்னுடைய எண்ணத்தில் உதித்த கவிதைகள் , கட்டுரைகளை காணலாம்.
உங்களின் மேலான கருத்துகளை பதிவு செயுங்கள். என் எழுத்துக்களை மேம்படுத்த உதவும்

என்றும் உங்களின் தோழன்
ப.அலெக்சாண்டர்

அவர்களும் இருக்கின்றார்கள்


ஆலயமணியோசைக்கு

விழுந்து தொழுபவன் நான்!.

இன்றோ.,

உன் கொலுசின் மணியோசைக்கு

என் இதயம் தொழுகின்றது!

கடவுளும் - காதலும்

கண்ணுக்குத் தெரிவதில்லை.,

இரண்டுக்கும் உருவம் இல்லை.,

இரண்டையும் நம்புவோர்

ஆயிரமாயிரம்!

நான்

பாதயாத்திரை செல்லும்

புனித பாதை

உன் தெரு!

கடவுளும்,

பெற்றோரும் - பிறந்தோரும்

இருந்த மனதில்

இப்போது

"அவர்களும்" இருக்கின்றார்கள்!

நடுப்பகல் ஆனபோதும்

இருண்டு போனதாகவே தோன்றுகிறது

நீ வராத பொழுது!

எல்லோரும் இதைத்தான்

காதல் என்றார்கள்!

அதை மறுதலித்தேன்.,

இதுதான் என் "வாழ்க்கை " என்றேன்!

பணப்பை

ஒண்ணாந்தேதி
பிள்ளைதாச்சி.,
இரண்டாம் தேதி
மலடாச்சி.,

ஏற்றாத கற்பூரம்
காற்றில் கரைய.,
விற்காத பனிக்கட்டியாய்
தீர்ந்துபோகின்றது

என்
பணப்பை!

பணப்பை முழுவதும்
பண வாசம்
பூ பிரிந்த
நார் போல!

தொட்டக்கை
துடித்திருக்க
விட்டுவந்தேன்
வட்டிக்காரனுக்கு!

ஒண்ணாந்தேதி
வேண்டாம் கடவுளே
இல்லேன்னா.,
கடன்காரன்
வேண்டாம் கடவுளே!







மனிதம்

ஒரு போருக்குப்பின்னோ!
ஒரு பேரழிவுக்குப் பின்னோதான்
மனிதம் என்பது
ஆமை போல் எட்டிப்பார்க்கிறது!
மதங்களை கடந்து.....,
இனங்களை கடந்து.....,
தேசங்களை கடந்து....,
மனிதம் எட்டிப்ப்பார்கின்றது!
சந்தோஷப்படும் பொழுதினில்
நெஞ்சிநோரம் வேதனயோடோறு
கேள்வி எழுகின்றது!
மனிதம் என்பது
ஆமை போல் இல்லாமல்.,
உலகம் போர்த்திய
காற்றாய் இருக்கக்கூடாதா?!